News October 23, 2025
வேலூர்: R.N.பாளையம் பகுதியில் மேயர் ஆய்வு!

வேலூர் மாநகராட்சியின் மேயர் சுஜாதா, மழையால் பாதிக்கப்பட்ட R.N.பாளையம் மற்றும் கஸ்பா பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மழை நீர் தேங்கிய பகுதிகளில் துரித நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்து, நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News October 24, 2025
வேலூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News October 23, 2025
வேலூர்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

வேலூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 23, 2025
வேலூர்: கனமழையால் பாதிப்பா? உடனே CALL!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையால் பாதிப்புகள் ஏற்படும் நிலையில், மக்கள் அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலூர் ஆட்சியர் அலுவலகம் — 1077, 0416-2258016, அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம் — 0416-2276443, காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் — 0416-2297647 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.