News August 18, 2025

வேலூர்: IT வேலை ரெடி.. நீங்க ரெடியா.?

image

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 18, 2025

விநாயகர் சதுர்த்தி விழா – கலெக்டர் தலைமையில் கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று(ஆக.18) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், திட்ட இயக்குநர் காஞ்சனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 18, 2025

வேலூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

image

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 19) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
1.வேலூர் மாநகராட்சி செல்வ விநாயகர் திருமண மண்டபம் வேலப்பாடி,
2. எஸ்பி மஹால் சத்துவாச்சாரி 

3. பாலாஜி திருமண மண்டபம் தெள்ளூர்

4. குமரன் மஹால் வேப்பம் பட்டு

5. பிஎஸ்ஆர் மஹால் பேரணாம்பட்டு

6. மகாதேவமலை கோயில் மண்டபம் காங்குப்பம் மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

வேலூர்: மக்கள் நலவாழ்வுத் துறையில் வேலைவாய்ப்பு

image

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் மாநகராட்சியில் செவிலியர், லேப் டெக்னீசியன், பார்மாஸிஸ்ட், எம்எல்ஹெச்பி, ஹெல்த் இன்ஸ்பெக்டர், UHN, MPHW கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆக.29ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் <>மேலும் விவரங்களுக்கு<<>>.

error: Content is protected !!