News August 31, 2025
வேலூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ▶️ வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599. ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️ சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
Similar News
News September 3, 2025
வேலூரில் இன்று முதல் இலவசம்!

வேலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணபிக்க <
News September 3, 2025
வேலூர்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள 2ம் நிலைக்காவலர், சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர், தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செப்டம்பர்-5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News September 2, 2025
சுற்றுலா விருது விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்!

வேலூர்: தமிழ்நாடு சுற்றுலா விருது 2025க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவித்தார். தகுதியுள்ள சுற்றுலா தொழில்முனைவோர், ஹோட்டல், ரிசார்ட், டிராவல் மற்றும் தொடர்புடைய துறையினர் செப்டம்பர்-15க்குள் www.tntourismawards.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாநில சுற்றுலா வளர்ச்சிக்கு அளிக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த விருது வழங்கப்படுகிறது.