News August 5, 2025
வேலூர் BC&MBC மக்களின் கவனத்திற்கு

வேலூர் மக்களே, BC&MBC நலத்துறை சார்பில்
▶️இலவச பட்டா
▶️விலையில்லா சலவை பெட்டி
▶️விலையில்லா தையல் இயந்திரம்
▶️தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன்
▶️கல்வி உதவித்தொகை
▶️தலைசிறந்த தனியார் பள்ளிகளில் மேல்நிலை கல்வி
▶️விருதுகள் (ம) பரிசுகள் ஆகிய திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற வேலூர் மாவட்ட BC&MBC நல அலுவலரை (044-27661888, 0416-2253012) தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்
Similar News
News August 6, 2025
வேலூரில் குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம்

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் முகாம் 11.08.2025 மற்றும் 18.08.2025 ஆகிய நாட்களில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். *தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*
News August 6, 2025
வேலூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழா

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறித்துறை இணைந்து நடத்தும் 11வது தேசிய கைத்தறி தின விழா ஆகஸ்ட் 7ஆம் தேதி குடியாத்தம் பத்மசாலிய திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் கைத்தறித் தொழிலாளர்களின் சாதனைகள் கௌரவிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விரைவாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 6, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள ஊரீசு கல்லூரியின் டிபோர் வளாகத்தில் நாளை காலை 9:30 மணியளவில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு கண்ட புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் வழக்கறிஞர் அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.