News November 14, 2025
வேலூர்: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 3, 2026
வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர்களின் இருப்பு விவரம், விற்பனை விவரம் மற்றும் பதிவு விவரங்களை எரிவாயு நிறுவனங்கள் தினமும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். சிலிண்டர்களை பதுக்குவது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குற்றமாகும். சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் பணியாளர்கள், முகவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.
News April 3, 2026
வேலூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

காட்பாடி அரும்பருத்தி பகுதியை சேர்ந்த சிவா (32) தொழிலாளி. இவரது மனைவி திலவவதி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சிவா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பிரம்மபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News April 3, 2026
வாக்கு சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (ஏப்ரல்.2) காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழிஞ்சூரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில அளவை) குமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


