News January 22, 2026

வேலூர்: 15 லட்சம் மோசடி செய்த கேடி லேடி!

image

அரசமரபேட்டையை சேர்ந்த 65 வயது பூக்கடை வியாபாரியிடம் அப்பகுதி வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் பெண், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். இதை நம்பிய வியாபாரி கடந்த செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சத்தை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எந்த லாபமும் கிடைக்காததால் தனது பணத்தை மீட்டு தருமாறு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

வேலூர் மாவட்டத்தில் 75 பேர் போட்டி!

image

வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 75 பேரின் வேட்பு மனுத்தாக்கல் ஏற்று கொள்ளப்பட்டது. 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கி, கடந்த 6ம் தேதி நிறைவடைந்து மனு மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

News April 9, 2026

வேலூர்: தூக்கில் தொங்கிய மாணவி!

image

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் கட்டிட மேஸ்திரி. இவரது மகள் சங்கரி (19), நர்சிங் கல்லூரி மாணவி. சங்கரி கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!