News August 8, 2025

வேலூர்: 10th போதும் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

image

வேலூர் மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 30 கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆக.12-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு <>இங்கு<<>> கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க

Similar News

News August 8, 2025

வேலூர் மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 8) “மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர்” என்ற நிகழ்வின் வாயிலாக சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலந்துரையாடினார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

News August 8, 2025

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் விப்ரோ நிறுவனம் சார்பில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு நாளை (ஆக.9) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள பி.ஆர்.பி கட்டிடத்தின் 7வது மாடியில் காலை 9 மணிக்கு முகாம் நடைபெறும். 2024 மற்றும் 2025 கல்வி ஆண்டில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்குபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு பகிரவும்

News August 8, 2025

வேலூரில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!