News September 5, 2025
வேலூர்: 100 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

வேலூர்: காட்பாடி கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று(செப்.4) மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற சென்னை தினகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவலைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 பேர் மீது மதுவிலக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
வேலூர் மாவட்டம் முழுவதும் 207 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (செப்டம்பர்-06) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 12 மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.
News September 7, 2025
வேலூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் திருக்குடைகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 24-ம் தேதியில் இருந்து வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதற்காக வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் மராட்டிபாளையம் கிராமத்தில் கிருஷ்ணர் விளையாடி, உறங்கி சென்ற இடமாக நம்பப்படும் ‘கிருஷ்ணன் பாறை’ என்ற இடத்தில் 2 திருக்குடைகளை நிறுவி பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்த திருக்குடைகள் விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும் என தெரிவித்தனர்.