News January 5, 2026

வேலூர்: +1 மாணவிக்கு சுத்தி சுத்தி LOVE டார்ச்சர்!

image

வேலூர் நகரை சேர்ந்த +1 படிக்கும் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த சக்தியும் (23) காதலித்து வந்தனர். மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறுமி சக்தியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் மாணவி பள்ளிக்கு செல்லும் பொது சக்தி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சக்தியை போலீசார் நேற்று முன்தினம் (ஜன.3) கைது செய்தனர்.

Similar News

News January 10, 2026

வேலூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

வேலூருக்குள் புகுந்த யானைக்கூட்டம்!

image

வேலுாா் மாநகராட்சிக்குள்பட்ட இந்திரா நகா், செங்குட்டை ஆகிய பகுதியில் நேற்று 13- யானைகள் கூட்டமாக உலா வந்துள்ளன. அப்போது, வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியபோது, விவசாய பயிர்களை நாசம் செய்துவிட்டு யானைக்கூட்டம் அங்கிருந்து சென்றது. தற்போது, DRONE மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

News January 10, 2026

7 பேரின் உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகர்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சமூக சேவகர் மணிமாறன் (38). இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்த 5 ஆண், 2 பெண், என மொத்தம் 7 பேரின் உடல்களை அடக்கம் செய்ய முன் வந்தார். உடல்களை முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று, நேற்று (ஜனவரி 10) வேலூர் பாலாற்றங்கரை மயானத்துக்கு கொண்டு வந்து மாலைகள் உள்ளிட்ட இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி அடக்கம் செய்தார்.

error: Content is protected !!