News May 13, 2024

வேலூர் ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 2024ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை செல்லும் நபர்களுக்கு தடுப்பூசி முகாம் இன்று (மே 13) நடந்தது. இந்த தடுப்பூசி முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் செலுத்தி கொண்டனர்.

Similar News

News April 8, 2026

வேலூர்: BOB வங்கியில் வேலை! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 21-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே-4ம் தேதியும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது‌‌. இதனை மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 8, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

image

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத 51 வயது பெண் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அத்திக்குப்பம் புதுமனை தெருவை சேர்ந்த தர்ஷன் (21) என்பவரை வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று தர்ஷனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!