News March 24, 2024

வேலூர்: வீட்டுக்கு வீடு பிரியாணி

image

வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர் பிரியாணி செய்யும் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்டனர். மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Similar News

News February 15, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

எஸ்பி தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு

image

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நாளை (பிப்ரவரி 16) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. வேலூரின் பல்வேறு இடங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் வீதியுலா நடைபெறும். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலாற்றில் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி வேலூர் எஸ்பி சிவராமன் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2026

வேலூர்: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸ் வேலை!

image

வேலூர் மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை(பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!