News December 26, 2025
வேலூர்: விவசாயி மின்சாரம் தாக்கி பலி!

வேலூர், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியை சேர்ந்த சேகர் வயது 70 இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்தநிலையில் நேற்று (டிச.25) மாலை விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டரை இயக்க சென்றுள்ளார். அப்போது மின் மோட்டார் இயங்காததால் அருகிலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரி செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி விவசாயி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 28, 2025
வேலூர்: திருநங்கையின் கழுத்தை அறுத்த நண்பர்!

வேலூர்: அப்துல்லாபுரத்தில் திருநங்கை ரசிகா மற்றும் வினோத்குமார் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத், நேற்று ரசிகாவுக்கு “சர்ப்ரைஸ்” தருவதாகக் கூறி அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். மேலும், போலீசுக்கு பயந்த அவர், கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
வேலூர் அருகே மளமளவென பற்றி எரிந்த தீ

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள கால்வாயில் மர்மநபர்கள் குப்பைகள் கொட்டி நேற்று (டிச.27) தீ வைத்து கொளுத்தி உள்ளனர். தீ மளமளவென எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதுகுறித்து, அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.