News March 5, 2026
வேலூர்: விரக்தியில் இல்லத்தரசி தற்கொலை

குடியாத்தம் கூடநகரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜமுனா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
வேலூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தது. இதையடுத்து இன்று (மார்ச் 11) வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்றம் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் வெடிகுண்டு புரளி என தெரியவந்தது.
News March 12, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச்- 11) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்- 12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 11, 2026
பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மார்ச்.11) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்
சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர்
சரவணன் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.


