News March 30, 2026
வேலூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 8, 2026
வேலூர்: BOB வங்கியில் வேலை! APPLY

வேலூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 8, 2026
அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் வரும் 21-ம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே-4ம் தேதியும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 8, 2026
வேலூரில் கொடூரத்தின் உச்சம்!

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத 51 வயது பெண் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அத்திக்குப்பம் புதுமனை தெருவை சேர்ந்த தர்ஷன் (21) என்பவரை வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று தர்ஷனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


