News December 14, 2025
வேலூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த நவ-4ல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பபெற்று பதிவேற்ற பணியும் நடந்து முடிந்த நிலையிலும், இந்திய தேர்தல் ஆணையம் மேலும் 3 நாட்கள் நீடித்து இன்றோடு டிச-14 இப்பணிகள் நிறைவடை உள்ளது. மேலும், தங்களது SIR படிவத்தை BLO அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் அறிவிக்கப்பட்டது.
Similar News
News December 19, 2025
வேலூர்: மாணவிகளிடம் அத்துமீறிய டிரைவர்!

காட்பாடியை சேர்ந்த 11 வயது சிறுமி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பள்ளி பேருந்தில் செல்லும் போது, டிரைவர் தேவேந்திரன் (61) மாணவி மற்றும் அவரின் அருகில் இருக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் தேவேந்திரனை வேலூர் மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 19, 2025
வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை!

வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (37), மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் சத்துவாச்சாரி போலீசில் கடந்த 5ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு தலைமறைவாக இருந்த தட்சிணாமூர்த்தியை நேற்று (டிச.18) கைது செய்தனர்.
News December 19, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


