News January 1, 2026
வேலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு வலை!

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒ.ராஜாபாளையம்-பின்னத்துரை செல்லும் வழியில் வனப்பகுதியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
வேலூர்: காதலி கண் முன்னே பற்றி எரிந்த காதலன்!

ஜாப்ராபேட்டையை சேர்ந்த வாலிபர் (25) அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.29) இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வாலிபர் திடீரென தீக்குளித்தார். தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் அவர் அலறியதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
வேலூர் போலீசாரை தாக்கிய நபர் கைது

வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று கஸ்பா வசந்தபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த தாமோதரன் மற்றும் 3 பேரை போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது மது போதையில் இருந்த தாமோதரன் ஏட்டு பாலாஜியை தாக்கி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமோதரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.
News January 30, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று (ஜன.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


