News November 6, 2025
வேலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் நவம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் சிறுமி பலி

வேலூர்: வரதரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் – மோனிகா தம்பதியின் மகள் கீர்த்தீஷா (4) பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.5) மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி முன்பக்கமாக நடந்து வந்துள்ளார். இதை கவனிக்காமல் ஓட்டுநர் தமிழ்செல்வன் பேருந்தை இயக்கியதால், சிறுமி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
News November 6, 2025
வேலூரில் பணம் திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை

வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த வினோத் (29). கடந்த ஆண்டு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்தபோது, ரூ.1.30 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார். இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினோத்தை இன்று (நவ.06) கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில், மாஜிஸ்திரேட் ரஞ்சிதா, வினோத்துக்கு 3 மாதம் சிறை தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
News November 6, 2025
வேலூர்: தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி சிறுமி பலி