News February 9, 2025

வேலூர் ரயிலில் தள்ளி விடப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் நிவாரண நிதி

image

வேலூர் மாவட்டம் காட்பாடி கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்த பெண் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பெண்ணின் முழு மருத்துவ செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் மேலும் மூன்று லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

வேலூர்: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

image

வேலூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவு

News March 10, 2026

வேலூர்: காட்பாடியில் அனல் பறக்கும் மோதல்!

image

தமிழகத்தில் நச்சத்திர தொகுதியில் ஒன்று காட்பாடி தொகுதி. கடந்த முறை நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட அ.தி.மு.க, இந்த முறை காட்பாடியைக் கைப்பற்றத் தீவிரமாக உள்ளது. வி. ராமு (கடந்த முறை போட்டியிட்டவர்) அல்லது அந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த முறை காட்பாடி யாருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

News March 10, 2026

வேலூர்: அரசு பஸ்சில் சிக்கி வாலிபர் பலி!

image

சாத்து மதுரை பகுதியைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (19). இவர் அடுக்கம்பாறையில் உள்ள தனியார் காவலர் பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 09) சாத்து மதுரை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!