News April 2, 2024
வேலூர் முழுவதும் இன்று ட்ரோன்கள் பறக்க தடை

வேலூர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்று (ஏப்ரல் 2) தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் வேலூர் மாநகராட்சி பகுதிகள் முழுவதையும் “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” (No Flying Zone) பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றிய கலெக்டர்!

இந்திய நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவையொட்டி, இந்திய விடுதலைக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News August 15, 2025
வேலூரில் +2, டிகிரி படித்தவர்களுக்கு இலவச பயிற்சி!

வேலூர் மக்களே, AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், AI ஆராய்ச்சி அசோசியேட் ஆகிய பதவிக்கு ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெற ஏற்பாடு செய்யப்படும். <
News August 15, 2025
வேலூர்: இந்தியாவின் அடையாளம்!

வேலூர் சிப்பாய் கலகம் 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ல் நடைபெற்றது. இது இந்தியாவின் முதல் சுதந்திர கிளர்ச்சி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த கலகத்திற்கு முக்கியமான காரணம், சிப்பாய்களின் மத உணர்வுகளை புறக்கணித்து, புதிய உடை விதிகளை பிரித்தானியர்கள் கட்டாயமாக்கியது ஆகும். இதில், 200க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கொல்லப்பட்டனர். இந்த 79-வது சுதந்திர தினத்தில் வேலூர் புரட்சியை நினைவு கூர்வோம். ஷேர் பண்ணுங்க!