News September 6, 2025

வேலூர் முற்றிலும் இலவசம்! SUPER NEWS

image

வேலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் (அ) உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE

Similar News

News September 6, 2025

காட்பாடி 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் இன்று (செப்டம்பர் 06) காட்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் பவாட்டி (40) என்பவரை கைது செய்தனர்.

News September 6, 2025

திருவண்ணாமலை கிரிவலம்: பாதுகாப்பு பணிக்கு 200 போலீசார்

image

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தி.மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், 200 போலீசார், இன்று (செப்.6) தி.மலை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். என வேலூர் மாவட்ட SP தெரிவித்துள்ளார்.

News September 6, 2025

வேலூர் மாவட்டத்தில் திடீரென அதிகரித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது இந்நிலையில்  இன்று (செப்டம்பர் 06) திடீரென அதிகபட்சமாக 99.3°F  டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவு பதிவானது.  இந்நிலையில் மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. மேலும் பல இடங்களில் லேசான மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

error: Content is protected !!