News December 26, 2025
வேலூர்: முதியவரிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை!

திருவலம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், என்ஐஏ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், அவரை டிஜிட்டல் கைது செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய முதியவர் ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்தை மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பின் மர்மநபரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
வேலூரில் அதிகாரிகள் திடீர் ஆய்வு!

வேலூர் மாநகராட்சியினர் நேற்று (ஜன.25) நகரின் பல பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் 300 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடம் மொத்தம் ரூ.27,600 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News January 26, 2026
வேலூரில் துணிகர சம்பவம்!

வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி பகுதியில் உள்ள மருந்து கடை உரிமையாளர் நேற்று (ஜன.25) கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
வேலூரில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து!

வேலூர் அடுத்த வசந்தபுரத்தை சேர்ந்தவர் முபாரக் (26). இவர் தனது நண்பர் வசந்த்துடன் நேற்றிரவு பாகாயத்திற்கு வந்தனர். அங்கு நின்றிருந்த ஒருவரிடம் முபாரக் தனது நண்பர் குறித்து விசாரித்து அவருடன் நண்பரை பார்க்க நம்பிராஜபுரம் மலையடிவாரம் சென்றார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் கத்தியை எடுத்து முபாரக்கை வெட்டினார். இதுகுறித்து பாகாயம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


