News April 25, 2024
வேலூர் : மின்மாற்றியில் தீ விபத்து

வேலூர் சி.எம்.சி மருத்துமனை எதிரே மின்மாற்றியில் நேற்று ( ஏப்.24) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பொது மக்கள் மின்சார வாரியம், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வெயில் காரணமாக மின்மாற்றியில் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News March 4, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
வேலூர் : நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 3, 2026
காட்பாடியில் போக்குவரத்து மாற்றம் போலீசார் தகவல்

பழைய காட்பாடியில் 76ம்ஆண்டு மாடு விடும் விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சித்தூர் பஸ் நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பிரம்மபுரம் செல்லும் (கனரக வாகனங்கள் தவிர்த்து) ஓடை பிள்ளையார் கோயில் ஜங்ஷனில் திரும்பி வி.ஜி.ராவ் நகர் வழியாக பிரம்மபுரம் செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


