News April 18, 2024

வேலூர்: மின்சாரம் தாக்கிய சிறுவன்

image

அணைக்கட்டு, பெரிய தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த அபினேஷ் (12) அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வீட்டின் மொட்டை மாடியில் அபினேஷ் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேலே செல்லும் மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் தாக்கி அபினேஷ் காயமடைந்தார். இதையடுத்து அபினேஷை அவரது பெற்றோர் மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Similar News

News November 18, 2025

வேலூர்: கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் – மனைவி பலி!

image

வேலூர்: முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிக்கும் (32), சாந்திக்கும் (28) திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (17) நடைபெற்ற வாக்குவாதத்தில், சாந்தியை மணி கல், கட்டை மற்றும் கம்பியால் தாக்கியள்ளார். இதில் படுகாயமடைந்த சாந்தி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார், வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

News November 17, 2025

வேலூரில் மட்டும் 162 சைபர் கிரைம் புகார்கள்!

image

வேலூர்: கடந்த 1-ம்தேதி முதல் நேற்று வரை மாவட்ட சைபர் கிரைமில் 162 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அரெஸ்ட், பங்குச்சந்தை முதலீடு என ரூ.1.68 கோடிக்கு பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் இதுவரை ரூ.11.25 லட்சம் வரை மீட்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!