News November 29, 2024

வேலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 30) ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

வேலூர்: ரூ.20 லட்சம் மாயம் – விவரம் வெளிவந்தது!

image

வேலூர், கொணவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (47) பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு, அலுவலகத்தில் ரூ.20 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை அலுவலகத்தை திறந்து பார்த்த போது, அங்கு வைத்திருந்த 20 லட்சம் காணவில்லையாம். இது தொடர்பாக சுரேஷ் நேற்று (டிச-13) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

BIG NEWS: வேலூரை குறிவைக்கும் பாஜக?

image

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வேலூரில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், வேலூர், குடியாத்தம், ஆகிய தொகுதிகளில் பாஜக-விற்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என அடையாளம் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News December 14, 2025

வேலுார் வீரருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு!

image

தேசிய சட்ட பணிகள் ஆணை குழு & வேலுார் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், நேற்று லோக் அதாலத் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வேலுார், மூஞ்சுர்ப்பட்டை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கருணாகரன் (55) என்பவர், சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஆனார். அவரது குடும்பத்தினருக்கு, 1 கோடியே 60 லட்சம் ரூபாயை யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க நேற்று லோக் அதாலத் கோர்ட் உத்தரவிட்டது.

error: Content is protected !!