News September 3, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர்-03) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

Similar News

News September 5, 2025

வேலூர்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

▶️வேலூரில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிற்சி பெறாதவர்களாக இருந்தால் ‘<>வெற்றி நிச்சயம்<<>>’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 5, 2025

வேலூர்: தொழில் பழகுனர் பயிற்சி மேளா

image

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரதான் மந்திரி தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) வரும் செப்.8ஆம் தேதி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இதில் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் பயிற்சி வழங்க உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News September 5, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் இன்று(செப்.5) நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மது பானங்கள் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!