News April 25, 2024
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 43 மதுபாட்டில்கள், 180 லிட்டர் கள்ள சாராயம், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
வேலூரில் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

அரசுத்துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044-22321090 (மாநில கண்ட்ரோல் அறை), 044-22321090 (வடக்கு மண்டல எஸ்.பி) எண்களை பயன்படுத்தி கொள்ளலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அச்சம் தவிர்த்து லஞ்சம் தொடர்பான புகார்களை தைரியமா சொல்லுங்க. ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
வேலூர் கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த கலெக்டர்

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.26) வேலூர் கோட்டை கொத்தளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளனர்.
News January 26, 2026
வேலூர் காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அனைவருக்கும் இந்திய நாட்டின் 77-வது இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என சமூக வலைத்தள வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் விழிப்புணர்வுடன் இருப்போம், விபத்துக்களைக் குற்றங்களையும் தவிர்ப்போம், வலிமையான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உறுவாக்குவோம் எனவும் கூறியுள்ளார்.


