News August 17, 2025

வேலூர் மாவட்ட இணையதளம் முடங்கியது!

image

வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <>இணையதளம்<<>> முடங்கியது. மாவட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கி வந்த அரசு இணையதளம், கடந்த சில நாட்களாக வேலை செய்வதில்லை. மாவட்டத்தின் வரலாறு, சிறப்புகள், துறை சார்ந்த விவரங்கள், வேலைவாய்ப்பு, பொறுப்பு அதிகாரிகள் என அனைத்துமே அதில் இருக்கும். ஆனால், தற்போது அது வேலை செய்யாததால், பலர் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் தெரியவில்லை!. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 5, 2026

வேலூர்: விரக்தியில் இல்லத்தரசி தற்கொலை

image

குடியாத்தம் கூடநகரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜமுனா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஜமுனா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News March 5, 2026

வேலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

வேலூர் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <>இந்த இணையதளத்திற்கு <<>>செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!