News April 15, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியரின் இன்றைய அறிவிப்பு

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டார் அகாடமி மூலம் 12 முதல் 21 வயதிற்குப்பட்டோருக்கு இறகுப்பந்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற்றுநர் பதவி நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று ஏப்ரல் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
வேலூர் போலீஸ், ராஜஸ்தானில் அதிரடி!

குடியாத்தம் போலீசார் கடந்த மாதம் போதை மாத்திரை பயன்படுத்தியதாக 13 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தது ராஜஸ்தானை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று போதை மாத்திரைகளை சப்ளை செய்த பிரதாப் சௌத்ரி(36) நேற்று (நவ.05) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
News November 6, 2025
வேலூர்: பாதி வழியிலே பழுதடைந்த 108

வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு இன்று (நவ.06) அழைத்துச் சென்றனர். அப்போது சாலைகளில் ஆம்புலன்ஸ் பழுதடைந்து நின்றதால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
News November 6, 2025
வேலூர்: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் வேளாண் அடுக்கக அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி.எம்.கிசான் தொகையை தொடர்ந்து பெற முடியும். எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக ஆதார் கார்டு, சிட்டா ஆகியவற்றுடன் அருகே உள்ள பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


