News March 12, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல், விரிவாக்கம் செய்தல் போன்றவற்றிற்கான வரைபட அங்கிகாரம் இணைய தளம் மூலம் ஒற்றை சாளர முறையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News September 12, 2025
வேலூர் சிறகு விரி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

வேலூர் மாவட்டம் பிள்ளையார் குப்பம் பகுதியில் ஜி.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நாளை (செப்டம்பர்-13) பகல் 12.30 மணி அளவில் மாணவர்களுக்கான சிறகு விரி உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
வேலூர்: பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி 2A நேர்காணல் அல்லாத தேர்வில் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவியாளர்களின் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்டம்பர்-12) வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன் ஆகியோர் உடனிருந்தனர்.