News August 19, 2025

வேலூர் மாவட்ட அரசியல் கட்சி நீக்கம்

image

2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் போட்டியிடாத வேலூரை சேர்ந்த ‘டாக்டர் அம்பேத்கர் பீப்பிள் ரெவலூசன் மூவ்மென்ட்’ கட்சியினை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் விளக்கம் அளிக்கவில்லை என்றால் நீக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News August 19, 2025

வேலூரில் டிகிரி இருந்தால் வங்கி வேலை…

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <>www.ibps.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். உடனே விண்ணப்பியுங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News August 19, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஆகஸ்ட்-18) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News August 18, 2025

வேலூர் விவசாயிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!