News June 6, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் 190 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 6) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அதில், “190 லிட்டர் கள்ளச்சாராயம், 50 மதுபாட்டில்கள், 55 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 10 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

Similar News

News September 14, 2025

வேலூர்: ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்றது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான 153 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 14, 2025

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News September 13, 2025

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் குவிந்த 153 மனுக்கள்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் பொது விநியோக திட்டத்தின் சார்பில் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் ,சேர்த்தல், திருத்தம், மேற்கொள்ள சிறப்பு குறை தீர்ப்பு முகாம் இன்று (செப்டம்பர்-13) நடந்தது. இந்த முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 153 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!