News May 14, 2024
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழா இன்று (மே 14) செவ்வாய் கிழமை நடைபெற உள்ளதால் இதை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
வேலூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை(0416-2252345) அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17015879>>தொடர்ச்சி<<>>
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லத் திட்ட விவரங்கள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி தெரிஞ்சிக்கோங்க

வேலூர் சிப்பாய் கலகம் 1806-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 10) நடந்தது. இது இந்தியாவின் முதல் கிளர்ச்சி எனும் சிறப்பைப் பெற்றது. இந்த கலகத்திற்கு முக்கியமான காரணம், சிப்பாய்களின் மத உணர்வுகளை புறக்கணித்து, புதிய உடை விதிகளை பிரித்தானியர்கள் கட்டாயமாக்கியது ஆகும். இதில், 200க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் கொல்லப்பட்டனர். இது சுதந்திரப் போராட்டத்தின் முதல் துடிப்பாகக் கருதப்படுகிறது. ஷேர் பண்ணுங்க