News June 11, 2024

வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜுன் 11) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 150 லிட்டர் கள்ளச்சாராயம், 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 49 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து ஒரே நாளில் 16 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ‌

Similar News

News February 19, 2026

வேலூரில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

image

வேலூர் மாவட்ட மக்களே! சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா? அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது பயன் தரும்.

News February 19, 2026

வேலூரில் காமுகனுக்கு 5 ஆண்டு சிறை!

image

தொரப்பாடியை சேர்ந்த மீர் பாகர் அலி (54). இவர் டியூசன் சென்டர் நடத்தி வந்தார். அதில் 14 வயது சிறுமியிடம் மீர் பாகர் அலி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மீர் பாகர் அலியை கைது செய்தனர். போக்சோ சிறப்பு கோர்ட்டில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ராதா கிருஷ்ணன் மீர் பாகர் அலிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News February 19, 2026

வேலூரில் அதிகாரிகள் அதிரடி!

image

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று (பிப்.18) வேலூர் சத்துவாச்சாரி, கொணவட்டம் பகுதி கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது 3 கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு துறையினர் ‘சீல்’ வைத்தனர். 15 நாட்களுக்கு பின்னரே ‘சீல்’ அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!