News November 15, 2024
வேலூர் மாவட்டத்தில் 89 மது பாட்டில்கள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 15) நடத்திய சோதனையில் 89 மது பாட்டில்கள், 200 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
வேலூரில் அதிரடி கைது!

ஆந்திர மாநிலத்திலிருந்து சட்ட விரோதமாக போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிகொண்டா பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. விசாரித்ததில் குடியாத்தத்தை சேர்ந்த பாஷா என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் 31 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News March 2, 2026
வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

வேலூர் கொணவட்டம் பூக்கார தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (45), பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மன வேதனை அடைந்த குணசேகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 2, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


