News March 29, 2024
வேலூர் மாவட்டத்தில் 2641 நபர்களுக்கு தபால் வாக்கு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் நபர்கள் என மொத்தம் 2, 641 நபர்கள் தங்கள் வாக்கினை தபால் வாக்குகள் மூலம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலெட்சுமி இன்று (மார்ச் 29) தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்க நாளை (டிசம்பர் 06) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 05) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
வேலூர்: சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பலி!

காட்பாடி அரும்பருதி பகுதியை சேர்ந்தவர் நீலமேகன் (56), கூலித்தொழிலாளி. இவர் நேற்று (டிச.4) திருவலம்-காட்பாடி சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த பைக் நீலமேகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீலமேகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரம்மபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
வேலூர்: நாளை மின்தடை எற்படும் பகுதிகள்!

வேலூர், மேல்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (டிச.6) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொண்டகுப்பம், குமணதாங்கள், பெருமாள் குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும்.


