News September 3, 2024

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்க ஏரிகள் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக வேலூர் சதுப்பேரி ஊசூர் ஏரி மற்றும் கருகம்புத்தூர் ஏரி, குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி ஆகிய நீர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News August 5, 2025

வேலூர் மாவட்டத்திற்கு இனிமே நிம்மதி!

image

பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்த 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி. மயில்வாகனன் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இனிமேல் வேலூர் மாவட்டம் போதை பழக்கம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும்.

News August 5, 2025

வேலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.05) வேலூர் மாநகராட்சி மண்டலம் -4ல் டோல்கேட் நாதன் மஹால், கணியம்பாடி ஊராட்சி காட்டுப்புத்தூர் அண்ணாமலையார் மண்டபம், காட்பாடி ஊராட்சி சின்ன வள்ளி மலை ஜம்பு மகரிசி மண்டபம், பேர்ணாம்பட்டு ஊராட்சி கமலாபுரம் ஜி.எஸ்.எம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. தேவை உள்ளவர்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்.

News August 5, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஆகஸ்ட் 04) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!