News November 16, 2024

வேலூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 3 தாசில்தார்களை டிரான்ஸ்பர் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று மாலை உத்தரவிட்டார். அதன்படி பேரணாம்பட்டு தாலுகா தாசில்தார் வடிவேலு அணைக்கட்டு தாலுகா தாசில்தாராகவும், அணைக்கட்டு தாலுகா தாசில்தார் வேண்டா வேலூர் கலெக்டர் அலுவலக நிலப்பிரிவு தனி தாசில்தாராகவும், சென்னை சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சிவசங்கர் பேரணாம்பட்டு தாலுகா தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

Similar News

News March 2, 2026

வேலூரில் தூக்கிட்டு தற்கொலை!

image

வேலூர் கொணவட்டம் பூக்கார தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (45), பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மன வேதனை அடைந்த குணசேகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 2, 2026

வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 1, 2026

வேலூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <>இணைய<<>>தளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!