News September 6, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை தொழில்நுட்ப தேர்வு

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தேர்வு (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) நாளை (செப்டம்பர் 07) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 7,570 பேர் எழுத உள்ளனர். இதற்காக 3 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்கள், தேர்வறைகளை கண்காணிக்கும் பணிகளை 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
வேலூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

வேலூர் மக்களே, இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 5 வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை (https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)
News September 6, 2025
வேலூர் தீர்த்தகிரி முருகரை கஞ்சா கருப்பு தரிசனம்

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, வேலூர் மாவட்டம் தீர்த்தகிரி முருகன் கோவிலுக்கு இன்று காலை வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட அவர், அங்கு திரண்டிருந்த பக்தர்களிடம் கலந்துரையாடினார். கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.
News September 6, 2025
சாலை பாதுகாப்பு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மண்டல பொறுப்பாளர் பழனி மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சதீஷ் தலைமையில் நடந்த, ஊர்வலத்தில் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பாகச் செல்வது குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.