News November 8, 2025

வேலூர் மாவட்டத்தில் நாளை 9561 பேருக்கு எழுத்து தேர்வு

image

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர் மற்றும் சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள் தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நாளை நவ.9-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம், தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபுரம் ஸ்பார்க் பள்ளி என 3 மையங்களில் மொத்தம் 9,561 பேர் தேர்வு எழுத உள்ளனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 8, 2025

வேலூர்:பாலத்தின் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து!

image

பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.7) இரவு கண்டெய்னர் லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த சிறு பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் லாரியின் முன்பக்க சக்கரங்கள் உடைந்து ரோட்டில் ஓடின. கன்டெய்னர் லாரி டிரைவர் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 8, 2025

வேலூர்: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

image

வேலூர் மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <>Citizen Portal <<>>வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

வேலூர் இன்னும் சற்று நேரத்தில் சிறப்பு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 6 தாலுகாவிலும் இன்று (நவ.8) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!