News April 28, 2025
வேலூர் மாவட்டத்தில் எந்த பதவியில் யார்?

▶️வேலூர் மாவட்ட ஆட்சியர்-சுப்புலெட்சுமி (0416-2252345)
▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- மதிவாணன் (0416-2256802)
▶️மாவட்ட வருவாய் அலுவலர்- மாலதி (0416-2253502)
▶️இணை இயக்குனர் /திட்ட அலுவலர், ஊரகவளர்ச்சி முகமை- செந்தில் குமரன் (0416-2253177)
▶️மாநகராட்சி ஆணையர்-.ஜானகி இரவீந்திரன் (0416-2220578)
▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)- முத்தையன் ( 0416-2253034)
ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்
Similar News
News April 28, 2025
வேலூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் உத்தரவு

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று காலை 11 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
News April 28, 2025
தமிழ் தெரிந்தால் போதும்; அரசு வேலை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <
News April 28, 2025
காட்பாடி ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

காட்பாடி சேனூரைச் சேர்ந்த பிரதீப் (17) 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வீரக்கோயில் மேட்டில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் இறங்கி குளித்த போது திடீரென மூழ்கினார். சக நண்பர்கள் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.