News September 3, 2025
வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறையால், 03.09.2025 இன்று இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
Similar News
News September 5, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்கள் இன்று(செப்.5) நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும், மது பானங்கள் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரித்துள்ளார்.
News September 5, 2025
வேலூர்: மலிவு விலையில் சொந்த வீடு வேண்டுமா..?

வேலூர் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 3,500 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க
News September 5, 2025
வேலூர்: 100 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

வேலூர்: காட்பாடி கிருபானந்த வாரியார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று(செப்.4) மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற சென்னை தினகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவலைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.