News August 7, 2025

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூரில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையாக இருங்கள். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

Similar News

News March 3, 2026

அணைக்கட்டில் பாமக முக்கிய ஆலோசனை!

image

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு (மேற்கு) ஒன்றியம் நேமந்தபுரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று (மார்ச்.2) வாக்குச்சாவடி திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு தேர்தல் பணிகளை குறித்து பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

வேலூர்: மனஉளைச்சலில் விவசாயி எடுத்த முடிவு!

image

வேலூர்: ஊசூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 3, 2026

வேலூர் தீப்பற்றி எரிந்த கோட்டை பூங்கா

image

வேலூர் மாவட்டம் பிரசித்தி பெற்ற கோட்டையை சுற்றி அகழி மற்றும் பூங்கா உள்ளது. பூங்காவில் நேற்று (மார்ச் 02) மர்ம நபர்கள் வைத்த தீயில் பூங்காவில் உள்ள செடி கொடிகள் மற்றும் புற்கள் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!