News April 25, 2024
வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
வேலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

வேலூர் மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 20, 2025
மறைந்த துணை மேயரின் தந்தை உடலுக்கு அமைச்சர் மரியாதை!

வேலூர் மாநகர தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சுனில்குமாரின் தந்தை மாணிக்கம் உடல் நலம் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு இன்று (நவ. 20) பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட பலர் உடன் இருந்தனர்.
News November 20, 2025
வேலூர்: ஒரே நாளில் 17 பேர் மீது வழக்கு பதிவு!

வேலூர், ஏரியூரில் உள்ள திறந்த வெளிமைதானத்தில், நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மற்றும் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த வாலிபர்கள் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் இருதரப்பை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


