News May 18, 2024

வேலூர் மாணவர்களுக்கு ஓவிய பயிற்சி முகாம்

image

உலக அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் மற்றும் வட ஆற்காடு ஓவியர் சங்கம் இணைந்து வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச ஓவிய பயிற்சி முகாம் இன்று (மே 18) நடந்தது. இந்த முகாமை அருங்காட்சியக காப்பாற்றியவர் சரவணன் தொடங்கி வைத்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 21, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படிவேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடுஇன்று (ஏப்ரல்- 21) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 21, 2025

எதிர்காலத்தை பற்றி குழப்பமா இங்க போங்க

image

வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில், சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானதகும் இந்த சிவலிங்கத்தின் கீழே தண்ணீர் இருப்பதாகக் கூறப்படுகிறது அதனால் இங்குள்ள சிவபெருமாளுக்கு ஜலகண்டேஸ்வரர் என்கிற பெயரும் உள்ளது. காசிக்கு சென்று வந்தால் அமையும் மாற்றத்தை போல இந்த கோயிலுக்கு வந்து வேண்டி சென்றால் புதிய வழிகள் பிறக்கும் என்பது நம்பிக்கை, எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவோர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

வேலூரில் வாட்டி வதைக்கும் வெயில்

image

வேலூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!