News January 7, 2026
வேலூர்: மனைவி கைது – கணவனுக்கு வலை!

காட்பாடி போலீசார் வடுகங்குட்டை பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ், கூலிப் பான்மசாலா உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. தொடர்ந்து, ரூ.12,000 மதிப்பிலான 2.6 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், விற்பனையாளர் சுமத்ராவை (44) போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கணவர் கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
வேலூரில் வெறிச்செயல்

காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் ஏரிக்கரையில் கடந்த 31-ந் தேதி பள்ளிக்குப்பம் பகுதியைச் திவாகர் (25) இறந்து கிடந்தார். இந்த கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதத்தால் திவாகர் பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட வினோத்குமாரை (24) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஹரிஷ்குமார் (24) விஜய் ஆகிய இருவரும் நேற்று காட்பாடி கோர்ட்டில் சரணடைந்தனர்.
News January 8, 2026
வேலூர்: மலிவு விலையில் Sleeper Ticket!

வேலூர் மாவட்ட மக்களே! வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக இங்கே கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இதை உடனே SHARE!
News January 8, 2026
வேலூர்: ஊருக்கு வந்த ராணுவ வீரர் ஜெயிலுக்கு போனார்!

காட்பாடி, கரிகிரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முரளிதரன் (50) மற்றும் சிஆர்பிஎப் வீரர் தாமோதரன் (37) ஆகியோருக்கு இடையே நில தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் விடுமுறையில் வந்த தாமோதரனுக்கும், முரளிதரனுக்கும் நேற்று (ஜன.7) மீண்டும் ஏற்பட்ட தகராறில் தாமோதரன் முரளிதரனை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர.


