News March 3, 2026

வேலூர்: மனஉளைச்சலில் விவசாயி எடுத்த முடிவு!

image

வேலூர்: ஊசூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (42), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 7, 2026

வேலூரில் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்ஃபர்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பிரிவு மற்றும் ஆயுதப்படையில் பணிபுரியும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்து எஸ்.பி சிவராமன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ரஜினி, ஏழுமலை ஆகியோர் வேலூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், மிதிலேஷ்குமார் ஆகியோர் வேலூர் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News March 7, 2026

வேலூரில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு!

image

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் நேற்று (மார்ச் 06) சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

வேலூர்: லாரி மோதி கொடூர பலி!

image

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஒருவர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார், உயிரிழந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் வேலூரைச் சேர்ந்த நித்யானந்தம் என்பது தெரியவந்தது.

error: Content is protected !!