News August 28, 2025
வேலூர் மக்களே.. மிஸ் பண்ணிடாதீங்க

வேலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்” நாளை (ஆக.29) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது. காங்கேயநல்லூர் திருமுருகாநந்த கிருபானந்த வாரியார் ஆலயம், இளவம்பாடி கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடம், கீழ அரசம்பட்டு எம்ஜிஆர் மஹால், தொண்டான் துளசி எஸ்.ஆர்.எம் மஹால் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். (ஷேர் பண்ணுங்க)
Similar News
News August 28, 2025
வேலூர் கலெக்டர் ஆய்வு

வேலூர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரிகிரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 13 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அருள், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News August 28, 2025
BREAKING: வேலூரில் 5-வயது குழந்தை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மரம் வெட்டும் போது மின்கம்பம் கீழே விழுந்ததில் மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னை மரம் சாய்ந்ததில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து குழந்தை நவ்யா(5) உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News August 28, 2025
வேலூர்: B.E, B.Tech படித்தவர்களுக்கு வேலை

▶️ வேலூர் மக்களே, மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் (ம) சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️ சம்பளமாக மாதம் Rs.30,000– 1,20,000 வழங்கப்படும். ▶️ இதற்கு B.Sc, B.E.,B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். ▶️ விண்ணப்பிக்க https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் 17.09.2025-க்குள் விண்ணபிக்க வேண்டும். (இன்ஜினியர் படித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க)