News September 4, 2025
வேலூர் மக்களே இந்த நம்பர் இருக்கா?

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News September 7, 2025
வேலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பாதுகாப்பு நடவடிக்கை

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று(செப்.7) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலே அளிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் அவசர நேரங்களில் அருகாமையில் உள்ள காவலர்களின் எண்ணிற்கு அழைத்து உதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ரோந்து மூலம் இரவில் நடைபெறும் குற்றசம்பவங்கள் தடுக்கப்படலாம். SHARE பண்ணுங்க.
News September 6, 2025
காட்பாடி 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் இன்று (செப்டம்பர் 06) காட்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து குட்கா கடத்திய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் பவாட்டி (40) என்பவரை கைது செய்தனர்.
News September 6, 2025
திருவண்ணாமலை கிரிவலம்: பாதுகாப்பு பணிக்கு 200 போலீசார்

ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தி.மலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு பணிக்காக வேலூர் மாவட்டத்தில் இருந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், 200 போலீசார், இன்று (செப்.6) தி.மலை மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். என வேலூர் மாவட்ட SP தெரிவித்துள்ளார்.