News December 25, 2025

வேலூர் மக்களுக்கு SP கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து!

image

உலகம் முழுவதும் இன்று (டிச-25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

வேலூர்: கஞ்சா விற்றவரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்!

image

பேரணாம்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை எதிரில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்ததாக அப்பகுதி மக்கள் கையும் களவுமாக பிடித்து பேரணாம்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பிரபு நடத்திய விசாரணையில் பேரணாம்பட்டு குப்பைமேடு பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா (29) என்பதும் அவர் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News December 31, 2025

வேலூர்: செல்போனால் வந்த வினை – மாணவி விபரீத முடிவு!

image

வேலூர்: தார்வழி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் பிரியாமணி (17). அரியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அவர் வீட்டில் செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

வேலூர்: ஒரே ஆண்டில் ரூ.19 கோடி மோசடி!

image

வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடப்பு ஆண்டில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 3,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 519 மனுக்கள் பணம் இழப்பு இல்லாத மனுக்கள் ஆகும். மீதமுள்ள 2,631 பேர் ரூ.19 கோடியே 41 லட்சத்தை இழந்துள்ளனர். இதில் பல வங்கி கணக்குகளில் உள்ள 4 கோடியே 18 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரம் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!