News April 4, 2025
வேலூர் மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

வேலூர் மாவட்ட ஆட்சியரகம்- 0416-2252501, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, வாட்ஸ் அப் எண்- 9092700100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, பி.எஸ்.என்.எல் உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News November 9, 2025
வேலூர்: லாரியில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி!

வேலூர்: அணைக்கட்டு தெள்ளை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் நேற்று (நவ.8) லாரியின் கேபின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது கணியம்பாடி அருகே சென்ற போது உயர் அழுத்த மின்சார கம்பி உரசி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
தேர்வு மையம் முன்னேற்பாடு பணிகளை எஸ்பி ஆய்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வேலூர் மாவட்டத்தில் நாளை (நவ. 9) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 9561 பேர் எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையமான தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று ( நவ. 8) மாலை ஆய்வு செய்தார்.


